இறைவனின் திருப்பெயரால்....

Pages

Thursday, February 11, 2016

A.அஸ்லம் பாஷா, மமக MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.

ஏக இறைவனின் திருப்பெயரால்.....

ஆம்பூர் தொகுதியிலிருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா MLA அவர்கள் தொகுதியில் இதுவரை செய்த நலதிட்டங்கள்.

1. 2013-14 நெடுஞ்சாலை மானியக் கோரிக்கையில் ஆம்பூர் பெத்லேகம் இரயில்வே மேம்பாலம் கட்ட ரூ.30 கோடி பெற்று கொடுத்தது.

2. மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் ஆம்பூரில் அமைத்தது.

3. புதிய வட்டாட்சியர் அலுவலர் அலுவலகம் கட்ட ரூ.2 கோடி பெற்று தந்தது.

4. ஆம்பூர் அரசு மருத்துவமனையை தாலுக்கா மருத்துவமனையாக தரம் உயர்த்தியது.

5. மின்னூர் மற்றும் வெங்கடசமுத்திரம் ஊராட்சிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் புதியதாக கொண்டு வந்தது.

6. கிரிசமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தியது.

7. மாதனூர் ஒன்றியம் அரிமலை-கொல்லகொட்டாய் ஆத்துப்பாலம் ரூ.5 கோடியில் அமைத்தது.

8. ஆலங்காயம் ஒன்றியம் மேலகுப்பம் -இளையநகரம் ஊராட்சிகளை இணைக்கும் தரைப்பாலம் ரூ.47 இலட்சத்தில் அமைத்தது.

9. ஆம்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் ரூ.55 இலட்சத்தில் கட்டியது.

10.மின்னூர் தொழிற்பேட்டை அறிவித்தது(2012-2013 பட்ஜெட்)

11.சோமலாபுரத்தில் 110 துணை மின்நிலையம் ஆம்பூர் நகர மக்களுக்காக 6.50 கோடி செலவில் அமைத்தது

12.ஆம்பூர் நகர காவல் நிலையம் புதிய கட்டிடம் கட்டுவதற்கு முதலமைச்சரிடம் 55 இலட்சம் நிதி பெற்று தந்தது

13.பேருந்து வசதி இல்லாத பல்வேறு கிராமங்களுக்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தந்தது

14.சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 கோடிக்கு குடிநீர் வசதி,நியாய விலைக்கடை,நூலகம்,அங்கன்வாடிகள்,மகளீர் சுயஉதவிக்குழு கட்டிடம் மருத்துவமனை கட்டிடங்கள்,சாலை வசதி,மாணவர்களுக்கு பென்ச் மற்றும் இருக்கைகள் தொகுதி முழுவதும் செய்து கொடுத்தது

15. 5ஆண்டுகளில் 3000-க்கும் மேற்பட்டோருக்கு புதிய குடும்ப அட்டைகள் பெற்று தந்தது

16. 2012-ம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் முகாமில் ஒரே நாளில் 936 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெற்று தந்தது

17. 20க்கும் மேற்ப்பட்ட சிறிய கோவில்களுக்கு புனரமைப்பு நிதியாக ரூ.50,000/- வீதம் தந்தது.

18.மின்னூர்,மலையாம்பட்டு,கொல்லமங்கலம் போன்ற பெரிய ஏரிகளை ரூ. 1.65 கோடியில் தூர் வாரி, சுத்தப்படுத்தியது

19.நாய்க்கனேரி,பனங்காட்டேரி மலைப்பகுதிகளுக்கு மலைவாழ் மக்கள் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் சாலை அமைத்தது

20. ஆம்பூர் தொகுதி முழுவதும் ரூ.27 கோடிக்கு தார் சாலைகள் அமைத்தது.

21.மண்டல நூலகம் கட்டுவதற்கு ரூ.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இடம் கிடைக்காமல் நிலுவையில் உள்ளது

22.ஆம்பூர் நகரில் சிறுபான்மை மாணவர்கள் நலவிடுதி அமைத்தது

23. 20 கோடியில் ஆம்பூர் நகரம் முழுவதும் 275 புதிய மின் மாற்றிகள் மாற்றப்பட்டுள்ளது

கோரிக்கை வைக்கப்பட்டு பரிசீலினையில் உள்ள திட்டங்கள் :
--------------------------------------------------------
1.ஆம்பூர் தொகுதியில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பது தொடர்பாக

2.ஆம்பூரில் சார்நிலை கருவூலம் அமைப்பது தொடர்பாக

3.அகரம்சேரி -மேல் ஆலந்தூர் ஆற்றுத்தரைப்பாலம்

4.மின்னூர் -வடகரை ஆற்றுத்தரைப்பாலம்

5.மாதனூர் புறக்காவல் நிலையம் அமைப்பது.

6.ஆம்பூர் ஆனைமடகு அணை தூர் வாரி,ஆழப்படுத்தி அகலப்படுத்துதல்.

சட்டமன்ற உறுப்பினர் நிதி வருடத்துக்கு இரண்டு கோடி வீதம் ஐந்து வருடத்துக்கு பத்துக்கோடி நிதி எங்கேனு கேட்ட சில முட்டாள்களுக்கு இதன்மூலம் தெரிவிப்பது என்னவென்றால் பத்துக்கோடி மட்டுமல்ல கூடுதலாக சட்டமன்றத்தில் தனது சிறப்பான உரைகளின் மூலம் தமிழக அரசிடமிருந்து பெற்று தனது தொகுதிக்கு செலவீடப்பட்ட தொகை 106 கோடிக்கு மேல் என்பதை மேற்சொன்ன புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தனது தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு மேல் கூடுதலாக பத்து மடங்கு நிதி பெற்று தன் தொகுதிக்கு வழங்கியுள்ளார் மனிதநேய மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் A.அஸ்லம் பாஷா,MLA.

#தாய்கழக_போராளிகள்

Monday, February 8, 2016

மதுரை மிரண்டது......

அஸ்ஸலாமு அலைக்கும்
தமிழகத்தின் மூன்று பெருநகரங்களில் இரண்டுவாரகாலத்தில் அதிகாரவர்கம் மிரண்டு போகும் வகையில் உணர்வுபூர்வமாக களத்தில் உழைத்த அனைத்துசகோதர்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.
மதுரையில்......
காவல்துறை பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவிட்டநிலையில் போராட்டத்திற்கு 100க்கும் குறைவான வாகனங்களில்தான் மக்கள் வருவார்கள் என்ற உளவுதுறையின் கணக்கை நம் கருப்புவெள்ளை போராளிகள் தகர்த்து 600க்கும் மேற்பட்ட வாகனங்கள் தொடர்ந்து அணிவகுத்து போராட்டகளத்திற்கு வந்ததால் மதுரையின் அனைத்துபகுதிகளிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது ...
தமுமுக,மமகவின் போராட்ட வியூகங்களை இதுவரை அறிந்திடாத மதுரைமாநகர காவல்துறை
மேடைக்கு தடைபோட்டது.......
கண்டெய்னர் லாரியை மேடையாக மாற்றினோம்....
வயதுமுதிர்ந்த
கைகுழந்தைகளோடு களத்திற்கு வருகின்ற தாய்மார்களுக்காக வைத்திருந்த நாற்காலிகளை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்துசென்றார்கள்......
எடுத்துச்சென்ற நாற்காலிகள் எடுத்த இடத்தில் வைக்கப்பட வேண்டும் இல்லைஎன்றால்...
வரக்கூடியவாகனங்கள் நிறுத்தப்பட்டு ஆங்காங்கே சாலைகள்மறிக்கப்படும் என அறிவிப்பு செய்தோம் ....
மக்கள் களத்தில் திரள
தொடங்கினார்கள்
நாற்காளிகள் தாமாக வந்தது,
இளைஞர் அணி சகோதரர்கள் களமிரங்கினார்கள்
களத்தில் இருந்து காவல்துறையினர் விலகி பார்வையாளர்களாக மாறினார்கள்,
மக்கள்வெள்ளத்தால் நிறைந்தது போராட்டக்களம்....
நெல்லை ஏர்வாடியில் இருந்து வந்திருந்த சிறைவடிவ வாகனம் அனைவரையும் ஈர்த்தது
பெண்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது
தங்களின் உடல்ஊனத்தை பற்றி கவலைப்படாமல் 17ஆண்டுகாலம் சிறைகளில்வாடும் சமுதாய உறவுகளுக்காக சக்கரநற்காலிகளில் வந்த சகோதரர்களை பார்த்தவுடன் திரண்டிருந்த மக்கள் அல்லாஹ்அக்பர் என்று முழக்கங்களை அதிரவிட்டார்கள்..
நிகழ்ச்சிகள் துவங்கின...
நிகழ்ச்சிகளை தமுமுக மாநில செயலாளர் பழனி பாருக் தொகுத்து வழங்குவார் என பொதுச்செயலாளர் அறிவிப்பு செய்தார்,
இறைவசனத்தில் துவங்கி தமுமுக, மமக மாநில நிர்வாகிகளும் சிறப்புஅழைப்பாளர்களும் உரையாற்றினார்கள்
கூட்டத்தில் பேசிய அருண்சவ்ரி அவர்கள் நீண்டகாலமாக சிறைவாசிகளை விடுதலை செய்யகோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளது, இனி சிறை உடைப்பு போராட்டங்கள்தான் நடத்த வேண்டும் என்றார்
வழக்கறிஞர் புகழேந்தி அவர்கள்
சிறையில் நீண்டகாலமாக விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு முஸ்லிம்கள் என்ற காரணமல்ல அவர்கள் முஸ்லிம்களுக்காக போராடினார்கள் என்பதுதான் காரணம் என்றார்
ஹென்றி டிபென் அவர்கள்
சிறைகைதிகளுக்கான விடுதலை என்ற ஒற்றை கோரிக்கையை வைத்து ஆயிரக்கணக்கான மக்களை திரட்டி இந்தநாட்டிலேயே போராட்டம் நடத்திய அரசியல் அமைப்பு மனிதநேயமக்கள்கட்சி மட்டும்தான் அதற்காக நான் முதலில் மமகவிற்கு எனது நன்றியை பதிவு செய்கிறேன் என்றார்
கொளத்தூர் மணி அவர்கள்
இந்த நாட்டில் தேசதந்தை காந்தியை கொன்ற கோட்சேவிற்கெல்லாம் விடுதலை வழங்கி இருக்கிறார்கள்
ராஜீவ்காந்தியை கொன்றதாக சொல்லப்படுபவர்களை வெளியே விட மறுக்கிறார்கள்
என்றார்
உரைகளுக்கு இடையே ...
பழனி பாருக் , சிவகாசி முஸ்தபா ஆகியோர்களின் கோரிக்கை முழக்கங்கள் வின்னை பிழந்தது
பொதுச்செயலாளர் ப.அப்துல்சமது அவர்கள்
சமூகத்திற்கு இழைக்கப்படும் அநீதிகளையும், கோவைகலவரம்,இராஜிவ் கொலைவழக்கில் இழைக்கப்பட்ட அநிதீகளை பட்டியலிட்டார்
இந்த போராட்டம் முடிவல்ல இதுதான் துவக்கம் சிறைகதவுகள் திறக்கப்படும் வரை எங்கள் போராட்டம் ஒயாது என்றார்
இறுதியாக பேசிய மூத்ததலைவர் ஹைதர் அலி அவர்கள்
முஸ்லிம் சிறவாசிகளின் அவலங்களையும் சங்பரிவாரிகளுக்கு காட்டப்படும் சலுகைகளையும் பட்டியலிட்டார்
மதுரை மாநகர காவல்துறைக்கு
தனக்கே உரித்தான பாணியில் எச்சரிக்கை விடுத்தார்
எங்களை ஒடுக்கநினைத்தால் அந்த காவல்துறை அதிகாரியின் சட்டைகழட்டப்படும் என்றபோது திரண்டிருந்த மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது......
மீண்டும் முழக்கங்களுடன்
கருப்பு வெள்ளை பட்டாளம்
கலைந்தது........
மதுரை மிரண்டது......
களத்தில் உழைத்த அனைத்து சகோதர்களுக்கும் அல்லாஹ் நற்கூலிகளை வழங்க பிராத்திக்கிறேன்
-------- பழனி பாருக் ,தமுமுக ---------

Tuesday, February 2, 2016

தெருமுனை பிரச்சாரம்

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும்
 அபூதாகிர் உள்ளிட்ட முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி...
பேரரிவாளன் உள்ளிட்ட வாள்நால் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி...
feb 7-ல் மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாடம் சென்னை-மதுரை-கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டம் ஏன் என்று விளக்கி தெருமுனை பிரச்சாரம் இன்ஷா அல்லாஹ் இன்று 02/02/2016 அதிரை யில் முக்கிய இடங்களில் 4:30 மனி அளவில் நடைபெற உள்ளது இதில் தமுமுக மாநில செயளாலர் பழனி பாருக் அவர்கள் உரையாற்றுகிரார்.
தமுமுக-மமக அதிரை நகரம்.

Wednesday, January 27, 2016

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக-மமக செயல்வீரர்கள் கூட்டம்.

தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக-மமக ஒருங்கினைந்த  செயல்வீரர்கள் கூட்டம் 26/01/2016 அன்று மாலை 5:30 மணி அளவில் மதுக்கூரில் நடைபெற்றது, மமக தஞ்சை தெற்கு மாவட்ட செயளாலர் கப்பார் தலைமை வகித்தார், மமக பொருளாளர் டாக்டர் உமர், மமக துணை செயளாலர் அஜிஸ்,  தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக  செயளாலர் அகமது ஹாஜா, துணைசெயளாலர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிரை நகர  தமுமுக-மமக பொருளாளரும் மாநில செயர்க்குலு உருப்பினர் MO.செய்யது முகம்மது புகாரி கிராத் ஓதி துவங்கி வைத்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தகர் அணி செயளாலர் அன்னன் கலந்ர் அவர்கள் பங்களிப்பு  செய்து சிற்றுறையாற்றினார், மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் கலந்து கொன்டு மநிதநேய மக்கள் கட்சி நடத்தும் சிறைவாசிகள் விடுதலை செய்ய கோரி சென்னை, கோவை, மதுரை யில்  மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாடம். மதுரையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வது சம்மந்தமாக உருப்பினர்களின் ஆலோசினைகள் பெறப்பட்டு சுவர், தட்டி, லித்தோ போஸ்டர், பிட் நோட்டிஸ், ஆட்டோ விளம்பரங்கள், தெருமுனை பிறச்சாரங்கள் செய்து அதிகப்படியான மக்களை திரட்டி போராட்ட களத்திற்க்கு அழைத்துச்செல்வது என தீர்மானிக்கப்பட்டது.இருதியாக தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக மருத்துவர் அனி செயளாலர் ரியாஸ் நன்றியுரை கூரினார்.



Tuesday, January 26, 2016


(அதிரைக்கு) விருது அதிரையர்க்கு  விருது 

நம் நாட்டின் 67 குடியரசு தின நிகழ்ச்சி இன்று வெகுவிமர்சையாக கொண்டாடபட்டுவருகின்ற நிலையில்  நம் தமிழகஅரசால் ஆண்டு தோறும் குடியரசு தின விழாவில் மத நல்லினக்கத்திர்க்காண  கோட்டை அமீர் விருது  வழங்க்பப்படுவது வழக்கம் இவ்வாண்டுக்கான  நமது அதிரையைசேர்ந்த 
எம் . பி .அபூபக்கர் அவர்களுக்கு மத நல்லிணக்கத்திர்காண  கோட்டை அமீர் விருது வழங்கப்பட்டது

Friday, January 22, 2016

தமுமுகபொதுக்கூட்டம்அழைப்பு...

இன்ஷா அல்லாஹ் நாளை 23/01/2016 கோட்டைப்பட்டினதில் தமிழ் நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நகர கிளை நடத்தும் சமுதாய விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது,அதிரை தமுமுக-மமக அலுவலகத்தில் இருந்து மாலை 05மனிக்கு வாகனம் புறப்படும் சகோதரர்கள் அனைவரும் கலந்துகொல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
.இங்கனம்:
 தமுமுக அதிரை நகரம்.

,MLA.,‎பத்திரிக்கையாளர்களிடம்‬ பேட்டி

நேற்று‬ 2016-ம் ஆண்டின் முதல்
‪#‎சட்டப்பேரவைக்‬ கூட்டத் தொடரில்
‪#‎ஒடுக்கப்பட்ட_மக்களுக்காக‬
‪#‎சட்டமன்றத்தில்_குரல்_கொடுக்கும்_தலைவர்‬
‪#‎மனிதநேய_மக்கள்_கட்சி_தலைவர்‬
‪#‎மமக_சட்டமன்ற_குழு_தலைவர்‬
‪#‎மமக_இராமநாதபுரம்_சட்டமன்ற_உறுப்பினர்‬
‪#‎பேராசிரியர்_Dr_MH_ஜவாஹிருல்லாஹ்‬MBAM.,M.Phil.,Ph.D.

,MLA., அவர்கள்
சட்டமன்ற கூட்டத் தொடர் முடிந்து வெளியே வந்து‪#‎பத்திரிக்கையாளர்களிடம்‬ பேட்டி அளித்த போது...
மமக மாநில அமைப்பு செயலாளரும்,மமக ‪#‎ஆம்பூர்‬ சட்டமன்ற உறுப்பினர் ‪#‎அ_அஸ்லம்பாஷா‬ MLA அவர்கள் உடன் இருந்தார்.

Wednesday, January 20, 2016

கோரிக்கை ஆர்ப்பாட்டம்...

மனிதநேய மக்கள் கட்சி நடத்தும்..
பிப்ரவரி 7ல் ....10 ஆண்டுகளாக சிறையில் வாடும் சிறைவாசிகளை...
இந்திய அரசியல் அமைப்பு சட்டம்....
161ஐ தமிழக அரசு பயன்படுத்தி....
விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி....
கோரிக்கை ஆர்ப்பாட்டம்...
சென்னை, கோவை,மதுரையில்...நடைபெற இருக்கின்றது..இறைவன் நாடினால்..
அதன் முதற்கட்டமாக.....

Sunday, August 16, 2015

புதிய நிர்வாகிகளின் விவரம்

ஆம்புலன்ஸ் தொடர்புக்கு - 9750505094




த.மு.மு.க. செயலாளர் :   Aசாதிக் பாட்ஷா - 9942033233 
த.மு.மு.க. பொருளாளர் : M.Oசெய்யது முஹம்மது புஹாரி -9944449848 
த.மு.மு.க. துணை செயலாளர் : H. செய்யது புஹாரி - 9944997021 
த.மு.மு.க. துணை செயலாளர் : M .தமீம் அன்சாரி  - 8675196695

தமுமு.க .துணை செயலாளர்    :M.R  கமாலுதீன் -9543577794


தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்
அதிரை பேரூர் கிளை
கிளை எண்: 1603
கடை த்தெரு
அதிராம்பட்டினம் -614701
தஞ்சை தெற்கு மாவட்டம் . 
http://adiraitmmk.blogspot.com/
மெயில் : adiraitmmk @gmail .com 
இந்தியன் வங்கி
SB.A/C : 560614343 


மாநில தலைமையகம் 
எண் 7 வட மரைக்காயர் தெரு 
மண்ணடி 
சென்னை -600001
தமிழ்நாடு 
இந்தியா 

தொடர்புக்கு 
044-25247824
FAX -044 25233884

http://www.tmmk.in

தமுமுக அதிரை நகர கிளை பொதுக்குழு கூட்டம்

தமுமுக அதிரை நகர கிளை பொதுக்குழு கூட்டம் நேற்று இரவு 7:00 மணியளவில் மரைக்கான் என்கின்ற அப்துல் கபூர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமுமுக அதிரை பேரூர் கழக செயலளார் ஏஆர் சாதிக் பாட்சா தலைமை வகித்து வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட பொருளாளர் அதிரை அஹமது ஹாஜா, மாவட்ட துணை செயலாளர் மதுக்கூர் ஜபருல்லா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமுமுக அதிரை பேரூர் நிதி நிலை அறிக்கையை பொருளாளர் செய்யது முஹம்மது புஹாரி வசித்தார் .கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டது. கூட்ட முடிவில் தமுமுக அணி பொறுப்பாளர்கள் நியமனம் செய்வது, உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது, பிலால் நகர் பகுதி கோரிக்கை மற்றும் சிஎம்பி லேன் பகுதியில் பழுதடைந்த மின்கம்பங்கள் சரிசெய்ய சம்பந்தப்பட்டோரை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அடுத்த தமுமுக பொதுக்குழு கூட்டம் 12 வது வார்டில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

கூட்ட முடிவில் தமுமுக அதிரை பேரூர் துணை செயலாளர் கமாலுத்தீன் நன்றி கூறினார். இதில் தமுமுக உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்
Rate this posting: 
 0  :   0